Sunday, November 18, 2007

ஒரே பந்தில் ஒரே நேரதில் எத்தனை விக்கெட் எடுக்கலாம்

முதல் பகுதி ரொம்ப இழுத்துட்ட மாதிரி தெரியுது.அதனால இத முடிஞ்ச அளவு சுருக்கமா
மொதல்ல கிரவுண்டா ஒரு காடு,அதும் காட்டுகார அய்யன் வந்தா சொந்தபலத்துல ஓடி தப்பிச்சுக்கனுமாம்.

டாஸ்ல அவங்க டீம் வின்பண்ணி பேட்டிங் எடுத்தாங்க( டாஸ் வின் பண்ணா யாராயிருந்தாலும் பேட்டிங்தான்,)ரொம்ப சுமாரா பேட்டிங் பண்ணி பத்தோ, பதினைத்தோ ரன் எடுந்தானுங்க.
அடுத்து எங்க பேட்டிங், நானும் பழனிகுமாரும்( என்கூட படிச்சதுல படிச்சு உருப்பட்ட ஒரே ஆத்மா) ஓப்பனிங்.முதல் பால் ஒரு ரன்.அப்புறம் பேட்ட மாத்திகிட்டு இருந்தப்பதான் டீம்கேப்டன்(செம குண்டன்)பவுலிங் சைடு ஸ்டெம்ப்கிட்ட வந்து "ஏண்டா பீஜிஸ் சொண்ணீங்களாடா" ன்னு சொல்லிட்டு ஸ்டெம்ப்ப ஆவேசமா தட்டிட்டு குமார பாத்து நீ அவுட்டுடன்னான். அதே வேகத்துல எங்கள தாண்டி குடுகுடுன்னு ஓடி என்சைடுல இருந்த ஸ்டெம்பயும் தட்டீட்டு என்ன பாத்து "நீயும் அவுட்டுடா"ன்னுட்டான்

நானும் குமாரும் கேனையாட்டம் நடு கிரவுண்டுல நிக்கறோம்.பெரிய ரகளையாயிடுச்சு.பேட்ட மாத்தரப்பொ பீஜிஸ் சொல்லனுமாம், அப்படீன்னா என்னன்னு சொல்லவும் தெரியல அவ்னுங்களுக்கு.

அந்த பக்கமா எலெக்ட்ரீசியன் வேலைக்கு போண சீனியர் கிரிக்கெட் அண்ணனை பஞ்சாயத்துக்கு கூப்டாச்சு.அவரும் ஹோம் டீமுக்கான சொந்த ஊரு பலம், அந்த ஊரில் தன் எலக்ட்ரீசியன் வேலைக்கு உண்டாகும் பாதிப்பு போறவற்றின் அனைத்து சாத்தியக்கூறையும் ஆராய்ந்தார்.

சொந்த ஊரில் சொறி நாய்தான் சிங்கமாம். ரெண்டு பேரும் அவுட்,இதில் மாற்றமில்லையென்றானது.

கடசியில் பரிதாபமாக ஒரே பந்தில் ரெண்டு பேர் எப்படி அவுட்டகமுடியும்னும் கேட்டுப்பாத்தாச்சு. ரன் அவுட்ல எந்த பக்கம் அடிச்சாலும் அவுட்தானே? நான் ரெண்டு பக்கமும் அடிச்சுட்டேன் என்று லாஜிக்கலாக(?)பேசிவிட்டான் குண்டன்.


அப்போ இருந்து இப்போ வரைக்கும் இந்த சந்தேகம் முழுசா க்ளியர் ஆகவே இல்லை.

யாராச்சும் சொல்லுங்க ரெண்டு விக்கெட் ஒரே நேரத்துல எடுக்க முடியுமா?


மேட்ச் முடிவா? எங்க டீம் டெயில் எண்டர் குட்டி பசங்களே விளாயாடி ஜெயிச்சுட்டாங்க.

பீஜீஸ்னா என்னவா? அது BC bat change.(இதயும் குன்சா நாங்களே யூகிச்சது

0 comments: